search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியா ஷரபோவா"

    மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மரியா ஷரபோவா காலிறுதி வாய்ப்பை இழந்தார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லெய்க் பேர்ட்டி-யை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை மரியா ஷரபோவா 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டை 1-6 எனவும், 3-வது செட்டை 4-6 எனவும் எளிதாக இழந்தார். இதனால் காலிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.



    சொந்த மண்ணில் ஷரபோவை வீழ்த்திய ஆஷ்லெய்க் பேர்ட்டி, காலிறுதியில் 8-ம் நிலை வீராங்கனையான கிவிட்டோவை எதிர்கொள்கிறார்.
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு பயிற்சி ஆட்டமாக கருதப்படும் பர்மிங்காம் தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார். #sharapova
    ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையும், 2004-ம் ஆண்டின் விம்பிள்டன் சாம்பியனும் ஆன மரியா ஷரபோவா பர்மிங்காம் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாமில் காலிறுதி வரை முன்னேறிய ஷரபோவா விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கு ஓய்வு தேவைப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளார். இவர் 2015-ம் ஆண்டு இந்த தொடரில் அரையிறுதி வரை முன்னேறினார்.



    ஊக்கமருந்து பயன்படுத்தியது தொடர்பாக 2016-ல் கலந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டு காயம் காரணமாக கலந்து கொள்ளவில்லை. ‘‘எனக்கு பர்மிங்காமில் சிறந்த நினைவுகள் உள்ளன. இந்த வருடம் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று ஷரபோவா தெரிவித்துள்ளார்.
    பிரான்ஸ் வீராங்கனை கிரிஸ்டினா மிலாடெனோவிக்கை 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி மாட்ரிட் காலிறுதிக்கு முன்னேறினார் மரியா ஷரபோவா. #madridOpen
    பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டாக கருதப்படும் ஓபன்களில ஒன்றான் மாட்ரி, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா பிரான்சின் கிரிஸ்டினா மிலாடெனோவிக்கை எதிர்கொண்டார். இதில் மரியா ஷரபோவா 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இவருடன் கிவிடோவா, சுவாரஸ் நவோரா, கார்சியா, பிளிஸ்கோவா, பெர்ட்டென்ஸ், ஹாலெப், கசட்கினா ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினார்கள்.



    காலிறுதியில் ஷரபோவா பெர்ட்டென்ஸை எதிர்கொள்கிறார். ஷரபோவா தடைக்காலம் முடிந்து மீண்டும் களமிறங்கும்போது விமர்சனம் செய்தவர் கிரிஸ்டினா மிலாடெனோவிக். ஷரபோவாவின் முதல் தொடரான ஸ்டட்கார்ட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஷரபோவாவை தோற்கடித்திருந்தார். தற்போது அதற்கு பழிதீர்த்துள்ளார்.
    ×